கோவையில் மாநில அளவிலான காவல்துறை மண்டலங்களிடையேயான தடகள மற்றும் சைக்கிள் விளையாட்டுப் போட்டி

வரும் காலத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய அளவில் குதிரை ஓட்டப் பந்தயம் தமிழகத்தில் நடக்க உள்ளது என தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


கோவை: கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான காவல்துறை மண்டலங்களிடையேயான தடகள மற்றும் சைக்கிள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றன.



இந்த போட்டியில் 687 காவல்துறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.



இறுதி நாளில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் மற்றும் கூடுதல் காவல் துறை ஆயுதப்படை இயக்குனர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய காவல் துறை இயக்குனர் சங்கர் ஜிவால், போலீசாருக்கு அதிக வேலைகள் இருக்கிறது. அந்த வேலைகளுக்கு நடுவே பயிற்சி பெறுவதற்கு நேரம் குறைவாகவே உள்ளது. இவ்வாறான வேலைகளில் நடுவே போலீசார் பயிற்சி பெற்று விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த 63வது காவல்துறை தடகளப் போட்டியில் மொத்தம் 14 சாதனைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 12 சாதனைகளை பெண்களே நிகழ்த்தியுள்ளனர். பயிற்சியை செய்வது என்பது ஒரு இடைவெளி மாதிரி இருக்கிறது. நம்மிடம் உள்ளவர்களே பயிற்சி அளிக்கின்றனர். நல்ல பயிற்சியாளர்களை தனியார் மற்றும் அரசு துறைகளிலிருந்து நியமிக்கலாம்.

ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் இதை பரிசீலிக்க வேண்டும். மேலும் தமிழக காவல்துறையில் நிறைய திறமையாளர்கள் இருக்கின்றனர். பயிற்சிக்காக சொந்த செலவில் பெங்களூர் செல்கிறார்கள். அதற்கு பதிலாக அரசளவில் தேர்வு செய்து அனுப்பலாம். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் பொருட்களை வருடம் தோறும் வழங்கலாம். கடந்த சில மாதங்களில் அரசு விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வருகிறது.

வரும் காலத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சிக்காக உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக இந்திய அளவில் குதிரை ஓட்டப் பந்தயம் தமிழகத்தில் நடக்க உள்ளது. விளையாட்டில் ஏற்படும் காயங்களை விளையாட்டு வீரர்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த பங்கேற்கும் போட்டியில் திறமையை வெளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...