மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடைபெறும் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற யோகா பயிற்சியினை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.


கோவை: கோவையில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடி பார்வையில் மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கான யோகா பயிற்சிகள் வாரம் ஒரு நாள் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வழங்கப்படுகின்றன.



இதில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டன.



இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.



இந்த யோகா பயிற்சி மூலம் சுவாச பிரச்சனை, மன அழுத்தம், செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...