கோவை கவுண்டம்பாளையம் பகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது, இக்கூட்டம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.



முன்னாள் பகுதி செயலாளர் சுந்தரம், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்துகொண்டு பேசினார்.



கூட்டத்தில் கோவை பாராளுமன்றத் தொகுதியை இந்தமுறை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய அயராது பாடுபடுவது, சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைக்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவை கடுமையாக கண்டிப்பது, இ.வி.எம். வாக்குபதிவு முறையை மாற்றி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும், கோவை வடக்கு மாவட்டத்திலேயே கவுண்டம்பாளையம் தொகுதியில் நமது பகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய இரவு பகல் அயராது பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன் தகப்பனார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நடராஜன் தாயார், 17வது வட்டக் கழக பிரதிநிதி சங்கரின் தாய், தந்தை ஆகியோர் மறைவிற்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டதில் மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், தமிழ் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் குட்டி வேலுசாமி, தன்ராஜ், ரமணன், குமரேசன், காளிதாஸ், நிர்வாகிகள் சங்கர், லோகநாதன், சனில், வசந்த், சண்முகம், ஈஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோஜ் உள்பட மகளிர் அணியினர், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...