மருதமலை கோவிலில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடக்கம்

மருதமலை கோயிலில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) இந்து சமய அறநிலையத்துறை மூலம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் ஹர்ஷினி, மண்டலகுழு தலைவர் தெய்வயாணை தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...