பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பிப்.18ம் தேதி உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டம் - திருச்சி சிவா பங்கேற்பு

நாளை நடைபெறயுள்ள உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.



அதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் அறிவித்த இந்த கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக முதல்வர் அறிவித்த இந்த உரிமைமீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இதில் மாநில, நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஏர்பேர்ட் ராஜேந்திரன், மு.க.முத்து, அமுதபாரதி, நகர மன்ற தலைவர் சியமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...