தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி

பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக பயிற்சியில் பங்கேற்றவர்கள், கருத்து தெரிவித்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையத்தின் (BDTC) மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கான சுழற்சாவி தொழிலாளர் பயிற்சி 02.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவர்கள், பேராசிரியர்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப விரிவுரைகள், ஆய்வு மற்றும் கள ஆய்வு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் BDTC ஒருங்கிணைப்பாளர், முனைவர் தே.ரமேஷ் தம் வாழ்த்துரையில், ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மாசு இல்லாத சூழலை ஏற்படுத்துவதற்கும், சாண எரிவாயு தொழில்நுட்பம் உகந்ததாக இருக்குமென எடுத்துரைத்தார். முனைவர் பொ.விஜயகுமாரி, இணைப்பேராசிரியர் ஆகியோரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...