உடுமலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த ஜெகதீசன், உடுமலை ருத்திரப்பா நகரை சேர்ந்த நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக உடுமலை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நான்கு டாஸ்மாக் கடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த ஜெகதீசன், உடுமலை ருத்திரப்பா நகரை சேர்ந்த நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நால்வரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 68 மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அத்துடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...