ஒண்டிப்புதூரில் பட்ட பகலில் பள்ளி மாணவனை கல்லூரி மாணவன் வெட்டிக் கொன்ற சிசிடிவி காட்சி வெளியீடு

தங்கையை கிண்டல் செய்த பிரச்சனையில் பிரணவ் என்ற பள்ளி மாணவரை கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்த காட்சி ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவையில் பட்டப் பகலில் பிளஸ் டூ மாணவரை வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் பிரணவ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவருக்கும் சிங்காநல்லூரைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது.

இந்நிலையில் காலை 10:30 மணி அளவில் பிரணவ் ஒண்டிப்புதூரில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த கல்லூரி மாணவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளாலை எடுத்து பிரணவ்வை வெட்ட முயன்றார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனாலும் கல்லூரி மாணவர் அவரை விடாமல் துரத்திச் சென்று ஒண்டிப்புதூர் பேருந்து நிலையம் அருகே சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே கல்லூரி மாணவர் தப்பி சென்று விட்டார். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து தகவலின் பேரில் சிங்காநல்லூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிரணவ் பிணமாக கிடந்தார்.

உடனே காவல்துறையினர் பிரணவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர் சரணடைந்தார்.

உடனே அவர் சிங்காநல்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதில் பள்ளி மாணவருடன் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனியாக வந்தவரை கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. உடனே கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து காவல்துறையினர் கூறும்போது:- கொலை செய்யப்பட்ட பிரணவ் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தார்.

அப்பொழுது அவருடன் படித்த மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்துள்ளார். இது பற்றி அந்த மாணவி அதே பள்ளியில் பிளஸ்-1 படித்த தனது அண்ணனிடம் கூறியுள்ளார். அவர் பிரணவ் மற்றும் அவருடைய நண்பர்களை கண்காணித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக பிரணவ் உள்பட 8 பேரும் சேர்ந்து அவரை தாக்கி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னை தாக்கியவர்களை பழிவாங்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி தன்னை தாக்கிய ஐந்து பேரில் ஒருவரை கத்தியால் குத்தினார். அவர் அந்த வழக்கில் கைதான போது 12 ஆம் வகுப்பு படித்ததால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் வெளியே வந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் தனது தங்கையை கிண்டல் செய்தவர்களையும் அவரை, தாக்கியவர்களையும் பழிவாங்க துடித்துக் கொண்டே இருந்து உள்ளார்.

இந்நிலையில் தான் காலை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே தனியாக நடந்து சென்ற பிரணவை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பிளஸ் டூ மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...