மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்களால் கடந்தாண்டு 11,120 விவசாயிகள் தற்கொலை- பொள்ளாச்சியில் திருச்சி சிவா பேச்சு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம், டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.


கோவை: பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் நேற்று இரவு நடந்த உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பரப்புரை கூட்டம் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசிய போது, இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் ஒவ்வொன்றையும் யோசித்து எழுதினார்கள். ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அந்த மாண்புகள் சிதைக்கப்படுகிறது.

மத்திய அரசின் கடுமையான விவசாய சட்டங்கள் காரணமாக கடந்தாண்டு மட்டும் 11ஆயிரத்து 120 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது. தமிழகம், மேற்குவங்கம் டெல்லி, போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படாமல் செய்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பணியாக உள்ளது. நல்லதொரு அரசு என்றால் பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் சியாமளா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...