வால்பாறையில் 1500 பேர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விண்ணப்பம் அளித்த மூன்றாயிரம் பேரில், சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 1500 பேருக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் முகாம் வால்பாறை பகுதியில் நடைபெற்றது. முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் வேண்டி விண்ணப்பம் செய்தனர். அதனை ஏற்று சுமார் 1500 பேருக்கு இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையிலும் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் இலவச தையல் எந்திரம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை, தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, பழங்குடியினர் சான்றிதழ், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, நத்தம் சிட்டா நகல்,பட்டா உறுதிச் சான்று, ஒருங்கிணைந்த சான்று, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்றிதழ் போன்றவை 1163 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60,000 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் பள்ளி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் வட்டாட்சியர் வாசுதேவன் வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...