கோவை ஆனைகட்டி சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு

பேருந்தை நோக்கி ஒற்றை காட்டு யானை வருவதை பார்த்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார். சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் பேருந்தை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை, பின்னர் சாலை ஓரம் சென்று வனப்பகுதிக்குள் சென்றது.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மலைப்பாதையில் திடீரென ஒற்றை காட்டு யானை ஒன்று குறுக்கிட்டுள்ளது.



அப்போது பேருந்தை நோக்கி அந்த காட்டு யானை வரவே பேருந்து ஓட்டுநர் பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார். சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை சாலை ஓரம் சென்று வனப்பகுதிக்குள் சென்றது.

அதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி ஆனைகட்டிக்குச் சென்றார். காட்டு யானை பேருந்தை வழிமறித்ததால், பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...