கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் திறப்பு விழா

முப்பெரும் விழாவையொட்டி, பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் திறப்பு விழா விளையாட்டு விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் அக்ஷயம், சிஆர்ஐ பம்புகள் மற்றும் சித்தாப்புதூர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.

இவ்விழாவையொட்டி பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளியில் திறம்பட பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சித்தாபுதூர் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நிர்மலா, சிஆர்ஐ பம்புகள் பொது மேலாளர் விஜயராஜ், முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் மாவட்ட கூட்டு பொருளாளர் எஸ்.ராம்குமார், இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஏ.ராஜசேகர், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ஆர்.என்.கருணாநிதி, சித்தாபுதூர் முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் மனோகரன், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் அக்ஷயம் பொருளாளர் எம்.ஜே.எப். டாக்டர் டி.கர்ணன், சிஆர்ஐ பம்புகள் எஸ்.ராஜா, முன்னாள் மாவட்ட ஆளுநர் சாரதாமணி பழனிச்சாமி, பசிப்பிணி போக்குதல் மாவட்ட தலைவர் செல்வராஜ், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கியும் ஆசிரியர்களை ஊக்கப் படுத்தியும் பேசினார்கள்.



நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.கே.விஜயலட்சுமி மற்றும் அக்ஷயம் சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...