தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி

உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை, பழரசம்‌-வில்வம், தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி, சாம்பார் பொடி, ரசப் பொடி ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌” பற்றிய பயிற்சி 22.02.2024 மற்றும்‌ 23.02.2024 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மps முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌. கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

• உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை (Dehydrated vegetables and fruits)

• பழரசம்‌-வில்வம்‌ (Bael Squash)

• தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி(Hibiscus Ready to Serve beverage)

• சாம்பார் பொடி (Sambar Powder – Moringa leaves)

• ரசப் பொடி(Rasam powder-Thuthuvalai)

• ஆழி விதை இட்லி பொடி ( Flax seed Idly powder)

• சூப் மிக்ஸ் (Soup mix-Greens)

• ஊறுகாய்‌ (Pickle -Banana pseudo stem)

• பழ வகை ஜாம் ( Jam-Fig & dates)

• கீர் மிக்ஸ் ( Kheer mix – Vegetables)

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770 (ரூ.1500 +GST18%) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌- அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்,‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூ்‌- 641 003.

பேருந்து நிறுத்தம்‌- வாயில்‌ எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி எண்‌- 94885 18268, 0422-6611268 மின்னஞ்சல்‌ : [email protected]

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...