கோவை வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு

குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌ இன்று (19.02.2024) நேரில்‌ ஆய்வு மேற்கொண்டனா்‌.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌, நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.



தொடர்ந்து, அப்பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைப்பது தொடர்பாகவும்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடாந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட நஞ்சை கவுண்டன்‌ புதூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ தொடாபாகவும்‌, ரங்கா நகர்‌ பகுதியில்‌ 24மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ்‌ பிரதான குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

மேலும்‌, வார்டு எண்‌.19க்குட்பட்ட விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ணாபுரம்‌, ஸ்ரீவாரி குடியிருப்பு பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌, நகரில்‌ பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குப்பைகளை முறையாக தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்காதவாகளுக்கு அபராதம்‌ விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.11க்குட்பட்ட சிவசக்தி நகர்‌, மாருதி நகர்‌ பகுதியில்‌ புதிதாக தார்‌ சாலை அமையவுள்ள இடத்தினையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆப்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ ராமமூராத்தி, பழனிசாமி (௭) சிரவை சிவா, உதவி ஆணையர்‌ ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்‌ எழில்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ பவுன்ராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌ உட்பட பலர் உள்ளனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...