கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் எனும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


கோவை: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதில் கோவைக்கென சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை, கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான ' தோழி விடுதிகள்' எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கோவை, மதுரை மற்றும் சென்னையில், 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஆறு மாத உறைவிட பயிற்சி வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முதன்மை நதியான நொய்யலை புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் சென்னை, மதுரை போலவே மாபெரும் நூலகம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும். கோவையில் 1000 இடங்களில் இலவச wifi-hotspot வசதிகள் கொண்டுவரப்படும். கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் பணிகள் துவங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...