கோவை வடக்கு மண்டல பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட கணபதி, பூந்தோட்டம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



தொடர்ந்து, பூந்தொட்டம் பகுதியில் மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகத்தில் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஆயுர்வேத மருத்துவமனையையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...