சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் விழிப்புணர்வு

மேற்கத்திய நாடுகளுக்கு ஈடாக தற்போது இந்தியாவிலும் புற்றுநோய் சிகிச்சைகளின் தரம் அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கவனிப்புடன் சென்றடைய வேண்டும் என்று ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறினார்.


கோவை: சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினம் வருடம் தோறும், பிப்ரவரி மாதம் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் விரைவான நோயறிதல் மற்றும் சிகிச்சையை அணுக வேண்டும் என்பதும், அவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுமே இதன் முக்கியமான நோக்கம்.

இதனை முன்னிட்டு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், பிப்ரவரி மாதம் 17ம் தேதி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற மற்றும் பெற்று வரும் 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினர். சென்னை, கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பாஸ்கரன் கண்னூன் மற்றும் புற்றுநோய் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும், இதன் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. குழந்தைகள் புற்றுநோய்களில், லுகீமியா எனப்படும் ரத்த புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த வகை புற்றுநோய், எவ்வளவு விரைவில் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு குணப்படுத்தும் சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறியதாவது, மேற்கத்தைய நாடுகளுக்கு ஈடாக தற்போது இந்தியாவிலும் புற்றுநோய் சிகிச்சைகளின் தரம் அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கவனிப்புடன் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். புற்று நோய் மருத்துவத்திற்கென்றே, வளவாடி நாராயணசாமி புற்று நோய் மையம், 1958 ஆம் ஆண்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனை, கோவையில் நிறுவப்பட்டது.

தற்போது, அதிநவீன வசதிகளுடன் கூடிய புற்று நோய் மருத்துவப் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஜி.கே.என்.எம் தொண்டு அறக்கட்டளையின் சார்பாகவும் பல்வேறு நன்கொடையாளர்களுடன் இணைந்தும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளில் பலதரப்பட்ட சலுகைகளும், முற்றிலும் இலவச சிகிச்சைகளும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய நன்கொடையாளர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...