கோவையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவை, மாநகரக் காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கோவை: கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் குப்பமுத்து. இவா் நேற்று முன்தினம் (பிப்.18) இரவு பணி முடிந்து காந்திபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வி.கே.கே. மேனன் சாலையில் சென்றபோது, அந்த சாலையில் ஒருவா் பெண்ணிடம் நகையைப் பறித்து கொண்டு தப்பினார். அவா் நகைப் பறித்து தப்பியதை பார்த்த அதே பகுதியைச் சோ்ந்த வசந்தகுமார், என்பவா், அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சோ்ந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபரைத் தேடினா். அப்போது, பாரதியார் சாலையில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பதுங்கியிருந்த நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனா்.

விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டவா் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப்குமார் (22) என்பது தெரிய வந்தது. மேலும், இவா் ரத்தினபுரியில் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு விட்டு, வி.கே.கே.மேனன் சாலையில் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காட்டூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

அந்த நபா் மீது ஏற்கெனவே நகைப் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பமுத்துவை, மாநகரக் காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.19) தனது அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...