வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி வீட்டிற்கு சென்று ஆ.ராசா துக்கம் விசாரிப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் V.பத்மாவதியின் தாயார் அண்மையில் இயற்கை எய்தியதை அறிந்து இன்று (பிப்.20) அவரது இல்லம் சென்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆறுதல் கூறினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் TR.சண்முகசுந்தரம், கூடலூர் நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேந்திரன், SMT. கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், காரமடை கிழக்கு ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி இன்று (பிப்.20) தொடங்கி வைத்தார்.



உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...