தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சியில் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் பதிப்புரிமைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் பல்கலைக்கழக அண்ணா அரங்கில் முதுநிலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

19.02.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்ற தொடக்கவிழாவில், முதுநிலை மாணவர்கள், காப்புரிமைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.நடராஜன் வரவேற்பு உரையாற்றினார். முதுநிலை கல்வித் துறை தலைவர் முனைவர் என்.செந்தில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.



பிமி, காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக்கட்டுப்பாட்டாளர் சென்னை, தனது உரையில், மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கு இலவச இணையதளம் பயன்படுத்துவது மற்றும் கண்டுபிடிப்பு படிவத்தை எவ்வாறு சரியாக தயாரிப்பது என்பதை அவர்களுக்கு விளக்கினார்.

வெ. கிரிஜா, காப்புரிமை வழக்கறிஞர் மற்றும் IPaatEntiti IP இன் நிறுவனர், தன் உரையில் இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் அம்சங்களை விளக்கி, பல்வேறு வகையான உரிமைகளை பற்றி மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார்.

முனைவர் வெ. கீதாலட்சுமி துணைவேந்தர், மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...