கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: கிராமப்புறத்தில் நடக்கும் தீண்டாமைக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளை தங்கள் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும், முடி திருத்தம் நலவாரியத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சியில் இயங்கி வரும் சலூன் கடைகளில் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.



கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...