செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 22 பேர் கைது

தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 22 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று (பிப்.19) மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48), பருவாய் கார்த்திக் (வயது 40), லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60), ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50), வெள்ளியங்காடு செந்தில்குமார் (வயது 51), காட்டம்பட்டி மூர்த்தி (வயது 46), வடுகபாளையம் கதிர்வேல் (வயது 48), தென்னம்பாளையம் சேகர் (வயது 52), விஜயமங்கலம் (வயது36), வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ. 3,23,600 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...