கோவை பந்தய சாலையில் ஊழல் எதிர்ப்பு குறித்த செய்திப் பலகை திறப்பு

ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பிரிவு செயலாளா் என்.கே.வேலு தலைமையில் செய்திப் பலகை திறப்பு விழா பந்தய சாலையில் நடைபெற்றது.


கோவை: ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பிரிவின் சார்பில் செய்திப் பலகை திறப்பு விழா பந்தய சாலையில் நேற்று (பிப்.19) நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட பிரிவு செயலாளா் என்.கே.வேலு தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவா் துரை குமாரவேல், மாவட்டப் பொருளாளா் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். கோவை, கே.ஜி.மருத்துவமனை எதிரே உள்ள பந்தய சாலை சந்திப்பிலும், தி ஸ்கீம் சாலையிலும் ஊழல் எதிர்ப்பு தொடா்பான செய்திப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், இணைச் செயலாளா்கள் முத்துசாமி, சென்னமலையன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...