அடிப்படை வசதி செய்துதரக்கோரி காரமடை அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை

பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை எனம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பநகர் அடுத்த அம்பேத்கர் நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் மக்களுக்கு பட்டா அளித்து நான்கு வருடம் ஆயிற்று. இருப்பினும் இன்று வரை இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என்று இங்கு வாழும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்.19) அந்த பகுதியில் வசிக்கும் ஊர் மக்களில் ஒருவரான சுமித்ரா என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாததால் பலரும் இங்கு வந்து மது அருந்துகின்றனர்.

இந்த பகுதி அருகே கல்லுக்குழி இருப்பதால் அங்கு ஆண்கள் பலரும் மது அருந்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல முடிவதில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள் கீழே அடிக்கடி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.

இங்கு குடிநீர் வசதி இல்லை என்பதால், நல்ல தண்ணீர் 300 ரூபாய்க்கும், உப்பு தண்ணீரை ரூபாய் 700 ரூபாய்க்கும் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களை 7 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்தால், உங்கள் ஊர் இருட்டாக உள்ளது எனக் கூறி அவர்கள் வருவதில்லை.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அரசாங்கத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். பின்னர் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...