கோவையில் சாலை வசதி வேண்டி வருடக்கணக்கில் காத்திருக்கும் 21வது வார்டு பகுதி மக்கள்

தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கூறியதாக கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சரவணம்பட்டி கிராமம், விநாயகபுரம் வார்டு எண்.21 கீழ் உள்ள பாரதியார் வீதி, சிவதங்கம் நகர், அபிராமி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளில் பல்வேறு திட்டங்களுக்கு தோண்டப்பட்ட குழிகள், மழையினால் சேதமடைந்து பல காலமாக அப்படியே உள்ளது. குறிப்பாக பாரதியார் வீதியில் சாலை பராமரிப்பின்றி மிகவும் சேதம் அடைந்துள்ளது. இது கடந்த 15 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 21 ஆம் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் தொடர்ந்து சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி வேண்டி கேட்டுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.21க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். சாலை செப்பனிடுதல் பற்றி ஆணையர் தெரிவித்தது என்ன என்பது குறித்து கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் கேட்கையில், அவர் கூறியதாவது, ஆணையர் இன்று ஆய்வு செய்துவிட்டு, முதற்கட்டமாக இந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரவுள்ள தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள இந்த சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...