உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களின் வீடியோ வைரல்

கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுவதால், குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஊராட்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியை சுற்றி ஏராளமான நூற்பாலைகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையிடம் பொதுமக்கள் தரப்பில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரியும் மர்மநபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அனுப்பியும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். கடற்கரையில் மர்ம நபர் திருட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...