கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று (பிப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களிலும், மின்கம்பங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் மற்றும் அலைபேசி கேபிள் போன்ற கேபிள்கள் உள்ளன.

இந்த கேபிள்கள் மூலமாக மாநகரின் அழகியல் குறைவதுடன் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. பிரதான சாலைகள் சந்திப்பில் வயர்கள் குறுக்கிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லைஎனில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும், காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...