தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு

இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கடந்த மாதம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்றைய தினம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9.00 மணி முதல் இன்று காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.



இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார். தாராபுரம் ஊழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். நஞ்சியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...