ஆனைமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்

ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரடியாக ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை, சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை, ஆனைமலை பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.21) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடி மையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.



ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை, நடைபெற்ற மகப்பேறு ஆகியன குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.



இதேபோல, ஆனைமலை வட்டம் பகுதியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயக்குடி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தினை, கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி, நேற்று (பிப்.21) தொடங்கி வைத்தார்.



இதேபோல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சுரேஷ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...