கோவை மேற்கு மண்டல பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்

ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, பில்லூர்–III கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (22.02.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, முன்னதாக, மத்திய மண்டலம், இராமலிங்கம் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கணினி ஆய்வகம், நூலகம், அறிவியல் ஆய்வகம் மற்றும் சத்துணவுக் கூடத்தினையும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த ஆய்வில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கான பிரத்யேக தங்கும் விடுதி கட்டும் பணி, வார்டு எண்.41க்குட்பட்ட வடவள்ளி, பி.என்.புதூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கட்டடம் மற்றும் ராம்ஸ் நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார துணை மைய நிதியின்கீழ் (UHSC) ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையம் கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.38க்குட்பட்ட ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, பில்லூர் – III கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், வார்டு எண்.38க்குட்பட்ட மருதமலை பிரதான சாலை, வடவள்ளி பொம்மனம்பாளையம் ஆர்.ஆர்.அவென்யூ பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக்கடை மற்றும் வடவள்ளி கல்வீரம்பாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு அங்கன்வாடி மைய கட்டடங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஐசக் ஆர்தர், விமலா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் மரியபுஷ்பம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...