ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளின் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்

கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்திட வேண்டும். அனைத்து தனியார் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சியின் உரிமம் பெற்று வாகனத்தினை இயக்கிட வேண்டும் என்று மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளின் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (22.02.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது,

கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்திட வேண்டும். அனைத்து தனியார் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சியின் உரிமம் பெற்று வாகனத்தினை இயக்கிட வேண்டும். உரிமம் (License) இல்லாமல் வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து வாகனங்களுக்கும் GPS கருவி பொருத்தப்பட வேண்டும்.



GPS கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) கண்காணிக்கப்படும். ஒருமுறை கழிவு நீர் வெளியேற்றிட கட்டணமாக 6000 லிட்டர் வரை ரூ.200%-ம் மற்றும் 6000 லிட்டருக்கு மேல் ரூ.300%ம் உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செலுத்தி கழிவுநீரை வெளியேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், கழிவு நீர் அகற்றிட மாநகராட்சியின் இலவச தொலைபேசி எண்.0422-14420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பணி செய்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் (பொ) மரு.வசந்த், திவாகர், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், பிரேம்ஆனந்த், சந்தியா, ஸ்ரீதேவி, கவிதா, சுகாதார ஆய்வாளர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...