வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் மளிகை கடை மற்றும் நியாயவிலை கடையை உடைத்து 5 காட்டு யானைகள் அட்டகாசம்

இரவு சுமார் இரண்டு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஐந்து காட்டு யானைகள் கடையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளிருந்த மளிகை பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றது. இதேபோல், அருகில் உள்ள நியாய விலைக் கடையின் ஜன்னல் கதவின் சுவரை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை சாப்பிட்டு சென்றது.


கோவை: வால்பாறை அருகே மளிகை கடை மற்றும் நியாய விலை கடையை 5 காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால சூழ்நிலை மாற்றத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் வனப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது.

இதில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் பரமேஸ்வரி என்பவரின் மளிகை கடை மற்றும் மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடை உள்ளது. இரவு சுமார் இரண்டு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஐந்து காட்டு யானைகள் கடையின் ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்து உள்ளிருந்த மளிகை பொருட்களை எடுத்து சிதறி சாப்பிட்டு சேதப்படுத்தியது. அதேபோல் அருகில் உள்ள நியாய விலைக் கடையின் ஜன்னல் கதவின் சுவரை உடைத்து உள்ளிருந்த மூன்று மூட்டை அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை எடுத்து சாப்பிட்டு சாலையில் சிதறி வீசியது.



அதேபோல் காட்டு யானைகள் அங்கிருந்து கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு வந்து சாலையில் வைத்திருந்த கடைகளை உடைத்து சேதப்படுத்தியது. அங்கு இருந்த குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை எடுத்து சாப்பிட்டு சாலையில் வீசியது. இதனால் கூழாங்கள் ஆற்றுப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் சேதம் அடைந்தன.

வனத்துறையினர் அப்பகுதியில் வந்து காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை உடைத்ததை அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் நேரடியாக அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து யானைகள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...