கோவை பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றம் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் கோவையில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோவையில் காலை 5.45 மணிக்கு கோவை-பெங்களூரு உதய் ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் அமைப்புகள், பயணிகள் சங்கத்தினா் சார்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும். 8.03 மணிக்கு திருப்பூா், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32-க்கு சேலம், 10.51-க்கு தருமபுரி, 12.03-க்கு ஓசூா், பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மீண்டும் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 3.10 மணிக்கு ஓசூா், 4.22 மணிக்கு தருமபுரி, 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூா், இரவு 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...