கோவை வழித்தடத்தில் பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

பிப்ரவரி 23 மற்றும் 25-ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06502) மறுநாள் மாலை 4.30 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெங்களூரில் இருந்து பிப்ரவரி 22, 24 - ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் பெங்களூா்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06501) மறுநாள் இரவு 7.10 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல, பிப்ரவரி 23 மற்றும் 25-ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06502) மறுநாள் மாலை 4.30 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...