பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில், இந்த ரயிலானது திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். அதேபோல, கோவை-நாகா்கோவில் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16322) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...