கோவை கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்ததை தீயணைப்புத்துறையினர் 45 நிமிடம் போராடி அணைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அன்னுார், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (பிப்.22) இரவு, 8.00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பிடித்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அன்னுார் பகுதியில், 45 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...