கோயம்புத்தூர் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


கோவை: கோயம்புத்தூர் கொடிசியா திறந்தவெளி மைதானத்தில் இன்று (23.02.2024) தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும், "பெற்றோர்களைக் கொண்டாடுவோம் " கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

உடன் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன்., கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜா முருகன், இணை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ர. பாலமுரளி ஆகியோர் இருந்தனர்.



இதனிடையே, தமிழக அரசின் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தின் துவக்க விழா கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (பிப்.23) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசினார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஸ்வேதாசுகன் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதார் பதிவு திட்டத்தை துவக்கி வைத்தார்.



அதைத்தொடர்ந்து அவர் பேசும்போது ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமான வரி சான்றிதழ், போன்றவற்றிற்காக அரசு அலுவலகங்களை தேடி பெற்றோர்கள் செல்வதை தவிர்க்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ், ஆகியவை விரைந்து கிடைக்க வழி செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியிலேயே இவை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் மாரி செல்வி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...