உடுமலை பிரதான பைபாஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல், விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள உடுமலை-சின்னார் சாலையில் ஆரியபவன் சிக்னல் முதல் போடிபட்டி அண்ணாநகர் லூர்து மாதா பள்ளி வரை, அதே போன்று ராஜேந்திரா சாலையில் தினசரி மார்க்கெட் முதல் தளிரோடு மேம்பால இணைப்பு வரை,மேலும் தாராபுரம் சாலையில் தாஜ் தியேட்டர் முதல் பஸ் நிலையம் ரவுண்டான வரை உள்ள பகுதிகளில் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் முடிவு செய்யப்பட்டு நேற்று (22-2-24) வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல்,விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதனால் உடுமலை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடுமலை பகுதியில் சாலைகளின் இரண்டு புறங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

மீண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடுமலைப்பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...