கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்த ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம்

நடப்பு 2023-24ம் நிதியாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி வார்டு பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாமுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வார்டு பகுதிகளில் 24.02.2024 மற்றும் 25.02.2024-ம் தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2023-24ம் நிதியாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த பொதுமக்களின் வசதி கருதி மாநகராட்சியின் கீழே குறிப்பிட்டுள்ள வார்டு பகுதிகளில் 24.02.2024 மற்றும் 25.02.2024 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேற்கு மண்டலப்பகுதியில் 24.02.2024 மற்றும் 25.02.2024 தேதிகளில் வார்டு எண்.35-ல் அன் நகர் 3வது வீதி, நாகராஜன் நாகம்மாள் திருக்கோயில் வளாகத்திலும், 25.02.2024 அன்று மட்டும் வார்டு எண்.33-ல் முசு நகர் சமுதாய கூடத்திலும், வார்டு எண்.75-ல் சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.7 மற்றும் 8-ல் நேரு நகர் கிழக்கு பகுதியிலும், வார்டு எண்.24-ல் குருசாமி நகர் பகுதியிலும், வார்டு எண்.56 ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் வார்டு எண்.57-ல் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.85-ல் கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வார்டு எண்.93-ல் இடையர்பாளையம் சர்ச் வீதி- மாநகராட்சி சமுதாயக்கூடத்திலும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.15 அங்கன்வாடி மையம், சுப்ரமணியம்பாளையம், வார்டு எண்.19-ல் மணியகாரம்பாளையம், அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25-ல் காந்தி மாநகர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.28-ல் காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32ல் சிறுவர் பூங்கா நாராயணசாமி வீதியிலும், வார்டு எண்.62 பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், வார்டு எண்.80-ல் கெம்பட்டி காலனி – மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.84ல் ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் 24.02.2024 மற்றும் 25.02.2024 ஆகிய தினங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது. தவிர, 31.03.2024 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக ஏனைய நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...