தாராபுரத்தை அடுத்த மூலனூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது

பட்டா மாறுதல் செய்து கொடுக்க சேகரன் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டு மென விஏஓ சண்முகம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்ததின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை வாங்கும் போது விஏஓவை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூரை சேர்ந்தவர் சேகரன் (45). இவர் பட்டா மாறுதலுக்காக கடந்த 9-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் (40) இது தொடர்பாக விசாரணை நடத்த சேகரனை அழைத்துள்ளார்.

அப்போது பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டு மென சண்முகம் கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேகரன், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் இன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சேகரனிடம் கொடுத்து சண்முகத்திடம் கொடுக்க வைத்தனர். இதனை அவர் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த போலீசார் சண்முகத்தை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...