தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 4 கோடியே 70-லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் தொடக்கம்

திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் ஆகியவற்றை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டம் 2023-24 இன் கீழ் புதிய மழைநீர் வடிகால், சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் சின்னக் கடைவீதி டி எஸ் கார்னர் பகுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் வார்டு பகுதியில் உள்ள பழைய திருப்பூர் சாலை குடிசை பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கட்டுதல் மாநில நிதி குழு திட்டம் - பள்ளி மேம்பாட்டு நிதி - உட்கட்டமைப்பு பணிகள், வார்டு.17 வளையற்காரதெரு நகராட்சி நடுநிலை பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, தூய்மை பாரத இயக்கம் நமக்கு நாமே 2.0 திட்டத்தில் 2023-2024இன் கீழ் வார்டு.9 சூளைமேடு பகுதியில் புதிய பொது கழிப்பிடம் கட்டும் பணி 15.வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் 14,தார் சாலைகள் மேம்படுத்தும் பணி, திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி,நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் நகராட்சி நிதி - குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதியின் கீழ் 1 முதல் 30 வார்டுகளில் தண்ணீர் வசதிகள் செய்தல் என 4, கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 56-பணிகளை தொடங்கி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...