கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – காவல்துறையினர் விசாரணை

தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு அவர் வந்து விட்டார். இந்நிலையில் பெற்றோருடன் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கணேசன் 65. இவரது மனைவி விமலா (55). இவரது மகள் தியா காயத்ரி (25). மூன்று பேரும் மேற்படி முகவரியில் வசித்து வருகிறார்கள். இவரது மகள் தியா காயத்ரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தீட்சித் என்பவருடன் திருமணம் முடிந்து இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்வதால் பெங்களூரில் வசித்து வந்தனர்.

கணேசன் என்பவர் கோவையில் புரூக் பாண்டில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்படி திருமணம் முடித்த தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது.

இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரது தாயார் மற்றும் தந்தையருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததினால் மூன்று பேரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இது குறித்து சம்பவ இடத்தில் உதவி ஆணையர் மற்றும் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...