காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று போக்குவரத்தில் மாற்றம்

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.24) மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து காரமடை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காரமடை நகரில் தேரோட்டம் துவங்கியதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், காந்திநகர், நாக்குபெட்டா நகர், பெள்ளாதி வழியாக திருப்பி விடப்படும்.

அதேபோன்று கோவையில் இருந்து வரும், அனைத்து வாகனங்களும், பெட்டதாபுரம் வளைவில் திரும்பி, ஏழுசுழி, தோலம்பாளையம் சாலை, மங்கலக்கரை வழியாக, மேட்டுப்பாளையம் சென்றடையும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, காரமடை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...