முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினர்.


கோவை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதே போல் வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த செ.தாமோதரன் அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மதுக்கரை நகரச் செயலாளர் சண்முகராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, காந்திநகர் கிளைச் செயலாளர் சிவலிங்கம், கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கார்த்திக், மகேஷ் குமார், மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...