கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சாக்கடைகளை தூர்வார மாநகராட்சி ஆணையாளருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதி கணேசபுரம் 64-வது வார்டுக்கு உட்பட்ட சடையப்பன் வீதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி சீர் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இப்பதியில் உப்பு தண்ணீருக்காக தோன்றிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் தோன்றிய பள்ளங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இதனையும் கருத்தில் கொண்டு சரி செய்து தருமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...