ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்து பேனர் அகற்றம் - ஆனைமலை முக்கோணத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என போலீசாரிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலையில் MLA தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் நேற்று வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் இரவோடு இரவாக அதிமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றினர். இன்று காலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அதிமுகவினர் பேனர்கள் அகற்றப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த போது அனுமதி இன்றி பேனர் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

அதே நேரம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் அகற்றவில்லை. அதிமுகவினர் பேனர்களை மட்டும் அகற்றுவதின் உள்நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர்.

போலீசாரிடம் முறையான பதில் இல்லாததால், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொள்ளாச்சி சேத்துமடை சாலையில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சமரசம் அடைந்த நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...