கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிரியாவிடை

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆய்வாளர் கற்பகத்திற்கு சக காவலர்கள் அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...