முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலையில் அன்னதானம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல பெரிய கோட்டை ஊராட்சி அய்யலுமீனாட்சி நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.

பின்னர் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . அப்போது முதியவர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியாக உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

உடுமலை போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கவேல், உடுமலை கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ரத்தினசாமி, கதிர்வேல், முத்துசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வராஜ், பெரியகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் செயலாளர் ,நாகராஜ் மாவட்ட இணை செயலாளர் மகேஷ் குமார், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சீனிவாச பிரபு, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் இளம்பிறை சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...