வால்பாறை ஆழியார் சாலையில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்

சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கார் கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது. இதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் உலாவி வருகிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு வால்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆம்னி காரை பழனிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டு இருந்தார். சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது.

இதில் காரின் கண்ணாடி கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை சாமர்த்தியமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் வால்பாறை வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் ஆழியாறு சாலையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...