வால்பாறையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் -நகரமன்ற தலைவர் தலைமையில் பேரணி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து, மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முக்கியமான வீதிகளின் வழியாக வால்பாறை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை அஞ்சல் அலுவலகம் வரை சென்று திரும்பி சுகாதார மருத்துவமனை வழியாக சென்றனர்.

ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம், நெகிழும் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பு தொடங்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...